போலி வக்கீல்கள் 2 பேர் கைது


போலி வக்கீல்கள் 2 பேர் கைது
x

திண்டுக்கல்லில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதை தொடர்ந்து போலி வக்கீல்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வக்கீல்கள் போராட்டம்

திண்டுக்கல் வக்கீல் சங்கத்தினர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தனர். அதில் திண்டுக்கல்லில் 2 பேர் வக்கீல்கள் என கூறி ஏமாற்றுவதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யும்படி வக்கீல்கள் கூறியிருந்தனர். இதையடுத்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரையும் கைது செய்யக்கோரி விடிய, விடிய போலீஸ் நிலையத்திலேயே வக்கீல்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வக்கீல்களிடம், போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றனர். எனினும் வக்கீல்கள் தொடர்ந்து போலீஸ் நிலையத்திலேயே காத்திருந்தனர்.

2 பேர் கைது

மேலும் போலி வக்கீல்களை கைது செய்யக்கோரியும், ஆயக்குடியில் வக்கீல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகளின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே வக்கீல் என கூறி ஏமாற்றியதாக வடமதுரை பகுதியை சேர்ந்த ஜோதிமுருகன் (வயது 34), தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (32) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story