தக்கலை அருகே தொழிலாளிகளின் பல்லை உடைத்த 2 பேருக்கு அபராதம்;கோர்ட்டு உத்தரவு


தக்கலை அருகே தொழிலாளிகளின் பல்லை உடைத்த 2 பேருக்கு அபராதம்;கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 May 2023 12:31 AM IST (Updated: 30 May 2023 12:13 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே தொழிலாளிகளின் பல்லை உடைத்த 2 பேருக்கு அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே தொழிலாளிகளின் பல்லை உடைத்த 2 பேருக்கு அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அபராதம்

தக்கலை அருகே உள்ள இரணியல் ரோடு பறையன்கால் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 36), தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (41) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்தநிலையில் கடந்த 1-3-2010 அன்று இரவு கோபாலகிருஷ்ணனும், தக்கலை ராமன் பறம்பை சேர்ந்த சசிகுமாரும் வீட்டின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மகேஷ், உறவினர் மணி (42) என்பவருடன் சேர்ந்து கற்களால் கோபாலாகிருஷ்ணனை தாக்கினார். இதில் அவருக்கு 2 பற்கள் உடைந்தன. இதனை தடுக்க வந்த சசிகுமாரும் தாக்கப்பட்டதில் அவருக்கு ஒரு பல் உடைந்தது.

இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் 2 பேர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு பத்மநாபபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பிரவின் ஜீவா குற்றவாளிகளான மகேசுக்கு ரூ.20 ஆயிரமும், மணிக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் இதனை கட்ட தவறினால் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story