காட்டு பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்
வேலூர் அருகே காட்டு பன்றியை வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்
வேலூரை அடுத்த பாலம்பாக்கத்தில் காட்டுபன்றியை சிலர் வேட்டையாடியதாக வேலூர் மாவட்ட வனஅலுவலர் பிரின்ஸ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் வேலூர் வனச்சரக அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான வனக்காப்பாளர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், பாலம்பாக்கத்தை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் (வயது 35), நொச்சிமேட்டை சேர்ந்த இளங்கோ (30) ஆகியோர் விவசாய நிலத்துக்கு வந்த காட்டுபன்றியை வேட்டையாடி சமைக்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது வனஉயிரின குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story