பெரும்பாறை அருகே மலைப்பாதையில் 2 அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல்


பெரும்பாறை அருகே மலைப்பாதையில் 2 அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல்
x

பெரும்பாறை அருகே மலைப்பாதையில் 2 அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் 80 பயணிகள் உயிர் தப்பினர்

திண்டுக்கல்

வத்தலக்குண்டுவில் இருந்து சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை வழியாக தாண்டிக்குடிக்கும், அதேபோல் தாண்டிக்குடியில் இருந்து வத்தலக்குண்டுவுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் அரசு பஸ் ஒன்று வத்தலக்குண்டுவில் இருந்து தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதேபோல் தாண்டிக்குடியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி மற்றொரு அரசு பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.

பெரும்பாறை அருகே கோழிஊத்து மற்றும் முருகன் கோவில் இடையே வனத்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோபுரம் உள்ள மலைப்பாதையில் வந்த போது 2 பஸ்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் ஒரு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக 80-க்கும் மேற்பட்ட பயணிகளும், பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story