குட்கா விற்ற 2 பேர் கைது


குட்கா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:17:10+05:30)

குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கப்பட்டி கிராமத்தில் செந்தில் (வயது 42) என்பவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள்(குட்கா) விற்பனைக்காக வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதே போல கோத்தகிரி பாண்டியன் பூங்கா பகுதியில் உள்ள உணவகத்தில் சோதனை செய்ததில், அங்கு விற்பனைக்காக புகையிலை பாக்கெட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக ரமேஷ் தாத் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story