அனுமதியின்றி செயல்பட்ட 2 விடுதிகளுக்கு 'சீல்'


அனுமதியின்றி செயல்பட்ட 2 விடுதிகளுக்கு சீல்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே அனுமதியின்றி செயல்பட்ட 2 விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் 300-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், சொகுசு பங்களாக்கள் உள்ளன. இந்தநிலையில் நேற்று கோத்தகிரி தாசில்தார் காயத்ரி தலைமையில் வருவாய்த்துறையினர் கோத்தகிரி அருகே நெடுகுளா, நடுஹட்டி, கப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளுக்கு நேரில் சென்று விடுதிகளின் ஆவணங்களை சோதனை செய்தனர். அப்போது கெட்டிகம்பை, கப்பட்டி பகுதிகளில் உள்ள 2 தங்கும் விடுதிகளில் கட்டிட உரிமம், ஹோம் ஸ்டே உள்ளிட்ட உரிமங்கள் இல்லாமல் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை தங்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் அந்த விடுதிகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருகிலிருந்த அனுமதியுடன் செயல்படும் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் ஆய்வு செய்து அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story