2 மணி நேரம் திடீர் மின்தடை


2 மணி நேரம் திடீர் மின்தடை
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெ ண்காடு, பூம்புகார் பகுதிகளில் 2 மணி நேரம் திடீர் மின்தடை ஏற்பட்டதால் பொதுத் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெ ண்காடு, பூம்புகார் பகுதிகளில் 2 மணி நேரம் திடீர் மின்தடை ஏற்பட்டதால் பொதுத் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

திடீர் மின்தடை

தி ரு வெ ண் காட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து திருவெண்காடு, பூம்புகார், பெருந்தோட்டம், நாங்கூர், மங்கை மடம், திருவாளி, திருநகரி, வானகிரி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் திடீரெ ன இந்த துணை மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டதால் திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

மாணவர்கள் அவதி

இந்த மின்தடையால் பிளஸ் - 1 , பிளஸ் 2 மாணவ, மாணவிகளும் பொதுத்தேர்வுக்கு படிக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பொதுமக்களும் அவதிப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மி ன்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். இதை தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு பிறகு மின்வினியோகம் வழங்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகை யில் இந்த துணைமின் நிலையத்தில் சரிவர பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இந்த பழுதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை படுகிறது. தற்போது பிளஸ் -1, பிளஸ் -2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து வருவதால் அவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும் என்றனர்.


Next Story