மின்னல் தாக்கி 2 வீடுகள் சேதம்


மின்னல் தாக்கி 2 வீடுகள் சேதம்
x

தக்கலை அருகே மின்னல் தாக்கி 2 வீடுகள் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக தாய்-மகன் உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே மின்னல் தாக்கி 2 வீடுகள் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக தாய்-மகன் உயிர் தப்பினர்.

மின்னல் தாக்கியது

தக்கலை அருகே உள்ள சரல்விளை, வண்ணான்விளையை சேர்ந்தவர் சுஜின். இவரது மனைவி ஸ்டாலின் மேரி (வயது31). இவர்களுக்கு 1¾ வயதில் ஒரு மகன் உண்டு. சுஜின் ஓசூரில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் ஸ்டாலின் மேரி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அவருடைய மகன் டி.வி. பார்த்து கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்து ெகாண்டிருந்தது. திடீரென இவர்களது வீட்டின் மீது மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் மேல்மாடியில் உள்ள படிகட்டு உடைந்தது. மேலும் வீட்டின் மேற்கூரையில் ஓட்டை விழுந்து சிமெண்டு பூச்சு உடைந்து விழுந்தது.

உயிர் தப்பினர்

சத்தம் கேட்டு டி.வி.பார்த்து கொண்டிருந்த குழந்தை அலறியது. உடனே, ஸ்டாலின் மேரி தனது குழந்தையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார். இந்த சம்பவத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். அதே நேரத்தில் வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதமடைந்தது.

மேலும் அருகில் உள்ள பால்தாஸ் என்பவரின் வீட்டின் சுவரில் கீறல் ஏற்பட்டது. இதுபோல் அந்த பகுதியில் பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story