பர்கூரில் யானை இடித்து தள்ளியதில் 2 வீடுகள் சேதம்


பர்கூரில் யானை இடித்து தள்ளியதில் 2 வீடுகள் சேதம்
x

யானை இடித்து தள்ளியதில் 2 வீடுகள் சேதம்

ஈரோடு

அந்தியூரை அடுத்த பர்கூர் மேற்கு தெருவை சேர்ந்தவர்கள் முனியப்பன் (வயது 40). மாதம்மாள் (65). இவர்களுடைய வீடு அருகருகே உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ஒன்று பர்கூர் கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது தெருவில் உள்ள நாய்கள் சத்தம் போட்டு குரைத்தன. உடனே வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் விழித்து எழுந்து வந்து வெளியே பார்த்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே யானை ஒன்று நின்று கொண்டிருந்ததை கண்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உயிர் தப்பினா்.

இதனால் யானை, திடீரென ஆவேசம் அடைந்து முனியப்பன் மற்றும் மாதம்மாள் ஆகியோரின் ஓட்டு வீட்டை தலையால் முட்டி இடித்து தள்ளியது. இதில் 2 பேரின் வீடுகளும் சேதம் அடைந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும் பர்கூர் வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானையால் சேதப்படுத்தப்பட்ட வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால் காட்டு யானைகள் அதன் வாசனையை முகர்ந்தபடி கிராமத்துக்குள் புகுந்து விடுகின்றன. எனவே கிராமத்துக்குள் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Related Tags :
Next Story