பொற்றையடி அருகேசாலையோர தடுப்பில் கார் மோதி 2 பேர் காயம்


பொற்றையடி அருகேசாலையோர தடுப்பில் கார் மோதி 2 பேர் காயம்
x

பொற்றையடி அருகேசாலையோர தடுப்பில் கார் மோதி 2 பேர் காயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

பெங்களூருவை சேர்ந்தவர்கள் பாபு, பாலாஜி. இவர்கள் பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வேலை சம்பந்தமாக திருவனந்தபுரம் வந்தனர். அங்கு வேலை முடிந்த பின்பு நேற்று அதிகாலையில் கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்ப்பதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து வாடகை காரில் புறப்பட்டனர். காரை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராகில் என்பவர் ஓட்டி வந்தார். கார் பொற்றையடி அருகே உள்ள இலங்காமணிபுரத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாைலயோரம் இருந்த தடுப்பில் மோதியது. இதில் காரில் இருந்த பாபு மற்றும் பாலாஜி இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபு கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் ராகில் மீது தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story