மோட்டார் சைக்கிள்-கார் மோதி 2 பேர் படுகாயம்
கோத்தகிரி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே வெஸ்ட் புரூக் பகுதியை சேர்ந்தவர்கள் பெருமாள் (வயது 46), குமார் (56). கூலித்தொழிலாளிகள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி கிராமத்திற்கு வேலைக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை பெருமாள் ஓட்டினார். அவர்கள் கட்டபெட்டு அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பெருமாள், குமார் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story