சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்


சாலை விபத்தில் 2 பேர் படுகாயம்
x

சாலை விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

தோகைமலை,

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள தர்மப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 23). இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் தனது சித்தி மகன் மகாவிஷ்ணு என்பவரை பின்னால் அமர வைத்துக்கொண்டு பாளையம்- தோகைமலை செல்லும் சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சென்றுள்ளார். அப்போது அதே ரோட்டில் எதிர்திசையில் தொண்டமாங்கினம் அடுத்த கவுண்டம்பட்டியை சேர்ந்த வேலுகுமார் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து, பழனியப்பன், மாவிஷ்ணு வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழனியப்பன், மகாவிஷ்ணு ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பழனியப்பன் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story