வாகனம் மோதி 2 பேர் காயம்
வாகனம் மோதி 2 பேர் காயம்
சிவகாசி
வத்திராயிருப்பு அருகில் உள்ள வெள்ளைபொட்டல் கிராமத்தை சேர்ந் தவர் வினோத்குமார் (வயது 26). இவர் விருதுநகர் நகராட்சியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். வினோத்குமார் தனது மோட்டார் சைக்கிளில் அழகாபுரி-எரிச்சநத்தம் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மோதியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள நதிக்குடியை சேர்ந்தவர் ஆறுமுகவேளார் (வயது 73). இவர் மம்சாபுரம்-நதிக்குடி ரோட்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஆறுமுகவேளார் மீது மோதியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு சிவகாசிஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ப.திருவேங்கிடபுரத்தை சேர்ந்த செல்லத்துரை மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்