ரெயிலில் கடத்திய 2 கிலோ கஞ்சா பறிமுதல்
அரக்கோணத்தில் ரெயிலில் கடத்திய 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம்
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ரெயில்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்துபவர்களை ரெயில்வே போலீசார் கண்காணித்து கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலபுழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 1.25 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது.
அதில் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சோதனை ெசய்தனர். அதில் ெரயிலின் முன் பக்க பொதுப்பெட்டியில் உள்ள லக்கேஜ் வைக்கும் இடத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ைபயை திறந்து பார்த்தபோது அதில் சுமார் 2 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. ரெயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.