லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
ஆம்பூர் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
லாரி மீது மோதியது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர்கள் பரத் (வயது 22), பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கவுதம் (25), கூலி வேலை செய்து வந்தார். யஸ்வந்த் (16), 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் இன்று இரவு மாதனூரில் இருந்து ஒடுகத்தூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பரத் ஓட்டினார்.
பாலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் நின்று கொண்டிருந்த லாரி மீது திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
2 பேர் பலி
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பரத், கவுதம் ஆகியோரை மீட்டு மாதனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத் மற்றும் கவுதம் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் யஷ்வந்தை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.