குற்றாலம் வெள்ளப்பெருக்கில் 2 பேர் பலி


குற்றாலம் வெள்ளப்பெருக்கில் 2 பேர் பலி
x

குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.

நெல்லை,

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . மாலை ஆறு மணிக்கு அருவிகளில் குளித்துக் கொண்டிருந்த பலர் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.

இதில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சேர்ந்த மல்லிகா(46) கடலூர் மாவட்டம் பண்ருட்டயை சேர்ந்த கலாவதி (70) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

அவர்களது உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டபோது மீட்கப்பட்டது. அருவியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து அ ங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். எனினும் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்துவது சிரமமாயிற்று. இதன் காரணமாக ஐந்து பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மூன்று பேர் காப்பாற்றப்பட்டனர் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் குற்றாலத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story