2 கி.மீ. தொலைவில் ஆட்டோவை நிறுத்துவதால்வீரபாண்டிக்கு செல்லும் பக்தர்கள் பரிதவிப்பு:கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர்கள் மனு
2 கி.மீ். தொலைவில் ஆட்ேடாவை நிறுத்துவதால் வீரபாண்டிக்கு செல்லும் பக்தர்கள் பரிதவிப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர்கள் மனு கொடுத்தனர்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பொறுப்பு வகிக்கும் ரவிச்சந்திரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 16-ந்தேதி வரை திருவிழா நடக்கிறது.
தேனியில் இருந்து வீரபாண்டிக்கு ஆட்டோவில் பயணிகளை அழைத்துச் சென்றால் 2 கி.மீ. தொலைவில் ஆட்டோவை போலீசார் நிறுத்தி விடுகின்றனர். இதனால், முதியவர்கள், குழந்தைகள் கோவில் வரை நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கருப்பசாமி கோவில் பின்புறம் உள்ள பைபாஸ் சாலை வரை பயணிகளை இறக்கி விட அனுமதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story