நண்பரை கொன்ற 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


நண்பரை கொன்ற 2 வாலிபர்கள்   குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக குன்னத்தூர் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொலையானவர் தாம்பரம் பவானி நகரை சேர்ந்த ஆகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆகாசின் நண்பர்களான தேனி ஆண்டிப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (26), மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியை சேர்ந்த அஜித் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், திருப்பூர் கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் வினீத் உத்தரவுப்படி கார்த்திக், அஜித் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டு அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story