ஓட்டப்பிடாரம் அருகேரூ.2 லட்சம் இரும்பு பொருட்கள் திருடிய வாலிபர் சிக்கினார்
ஓட்டப்பிடாரம் அருகேரூ.2 லட்சம் இரும்பு பொருட்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஜெகவீரபாண்டியாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2-ந்தேதி ரூ.2 லட்சம் மதிப்பிலான கட்டுமான அடித்தள இரும்பு கோணங்கள் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில், தூத்துக்குடி முத்தையாபுரம் முருகன் மகன் மாசானமுத்து (வயது 37) மற்றும் சிலர் அவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது ெசய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 196 அடித்தள இரும்பு கோணங்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story