2 லட்சம் விதைப் பந்துகள் தூவல்


2 லட்சம் விதைப் பந்துகள் தூவல்
x

மாஞ்சோலை வனப்பகுதியில் 2 லட்சம் விதைப் பந்துகள் தூவப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம் அணி வீரர்கள் மற்றும் நெல்லை இக்னேசியஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இணைந்து மணிமுத்தாறு, மாஞ்சோலை வனப்பகுதியில் 2 லட்சம் விதைப்பந்துகள் தூவினர். நிகழ்ச்சியை கமாண்டன்ட் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். துணை கமாண்டன்ட் தீபா, உதவி கமாண்டன்டுகள் சம்பத், ஸ்ரீதேவி, பள்ளி தலைமையாசிரியர் வசந்தி மேரி பிருந்தா, மருத்துவர் ஏகலைவன், வெங்கடாம்பட்டி டிரஸ்ட் நிறுவனர் திருமாறன், செங்கோட்டை ராம் மோகன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story