2 சாராய வியாபாரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பேரணாம்பட்டு அருகே 2 சாராய வியாபாரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
பேரணாம்பட்டு அருகே உள்ள பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தை சேர்ந்தவர் காந்து என்கிற காந்தகுமார் (வயது 41), கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி (37). இருவரும் சாராய வியாபாரிகள். காந்தகுமார் மீது 30 சாராய வழக்குகளும், கண்மணி மீது 10 வழக்குகளும் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் உள்ளன. இவர்கள் இருவரும் மீண்டும் சாராய தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேலும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story