நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 2 மாதம் சிறை
நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை மாரியம்மன் கோவில் தெரு சுப்பிரமணியபுரம் பொத்தையை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற மாரி (வயது 25). இவருக்கு அம்பை 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் மூலம் 1 வருட காலத்திற்கு நன்னடத்தை பிணை பெறப்பட்டது. ஆனால் ஜாமீனில் வந்தவர் கடந்த மாதம் 22-ந் தேதி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நன்னடத்தை பிணையை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டதற்காக அம்பை போலீசார், அம்பை 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் விஜயா முன்பு அறிக்கை சமர்ப்பித்தனர். இதன் மீது விசாரணை நடத்திய நடுவர், பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக மணிகண்டன் என்ற மாரியை 2 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story