விவசாயியை தாக்கிய மேலும் 2 பேர் கைது


விவசாயியை தாக்கிய மேலும் 2 பேர் கைது
x

விவசாயியை தாக்கிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி மடத்து தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 43). விவசாயியான இவரை கடந்த 15-ந் தேதி அப்பகுதியில் நடந்த தகராறில் 6 பேர் சேர்ந்து பீர்பாட்டிலால் தாக்கினர். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தெற்கு பாப்பான்குளம் இந்திரா காலனி மதன் (22), அஜித் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story