மேலும் 2 போலி டாக்டர்கள் கைது


மேலும் 2 போலி டாக்டர்கள் கைது
x
தினத்தந்தி 8 April 2023 12:30 AM IST (Updated: 8 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

போடி பகுதியில் மேலும் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேனி

தேனி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிமளா தேவிக்கு போடி பகுதியில் போலி டாக்டர்கள் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் போடியில் அரசு டாக்டர் பாலமுருகன் தலைமையில் ஒரு குழுவினர் திடீர் ஆய்வு செய்து போலி டாக்டர் நாகராஜன் என்பவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த வீரக் குமரன் (63), சிலமலை பகுதியை சேர்ந்த சுனில் (48) ஆகிய 2 பேரும் அலோபதி மருத்துவம் படிக்காமல் மருத்துவ சிகிச்சை அளிப்பதை அரசு டாக்டர் பாலமுருகன் கண்டுபிடித்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர்கள் 2 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story