2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற மேலும் 2 பேர் கைது


2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற மேலும் 2 பேர் கைது
x

2-வது நாளாக நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அவ்வப்போது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 28-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இதில் முதல் நாளில் கடல் வழியாக தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 7 பேரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்குள் படகில் சென்று தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கடலூர் ராசாக்குப்பம் கடற்கரையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடலில் விசை படகில் மத்திய, மாநில அதிரடிப்படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் 2 பேர் மாறு வேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

பின்னர் விசாரணை நடத்தியதில் அவர்கள், கடலூர் துறைமுகம் மற்றும் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வெடிகுண்டு வைப்பதற்காக வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் சாகர் கவாச் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.


Next Story