2 மோட்டார் சைக்கிள் திருட்டு


2 மோட்டார் சைக்கிள் திருட்டு
x

கொட்டாம்பட்டி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன.

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள பட்டூரை சேர்ந்தவர் சுந்தரம் இவருடைய மகன் சந்திரபாண்டி (வயது 41). இவர் பாண்டாங்குடி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் மாலையில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ அதை திருடி சென்றிருந்தார்கள். இது குறித்து சந்திரபாண்டி கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கமலமுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அதே போல் கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் நிரோஷ் குமார் (24). இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரிலும் கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story