2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்தது


2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்தது
x

விஷாரம் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் சாதிக்பாஷா நகர் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் கடை உள்ளது. இந்த கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.

இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். ஆனாலும் இரண்டு மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமாயின. மோட்டார் சைக்கிளுக்கு யாரும் தீ வைத்தார்களா என்பது தெரியவில்லை.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story