ரூ.12 லட்சத்தில் 2 புதிய மின்மாற்றிகள்


ரூ.12 லட்சத்தில் 2 புதிய மின்மாற்றிகள்
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழையூரில் ரூ.12 லட்சத்தில் 2 புதிய மின்மாற்றிகள்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழையூர் ஊராட்சி கீழத்தெரு பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் குறைவான மின் அழுத்தம் காரணமாக அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியை கீழ்வேளூர் எம்.எல்.ஏ. நாகைமாலி இயக்கி வைத்தார். இதில் நாகப்பட்டினம் தெற்கு உதவி செயற்பொறியாளர் ராஜமனோகர், மின்சாரத்துறை இயக்குதலும் பராமரித்தலும் நாகை உதவி செயற்பொறியாளர் சேகர், திருப்பூண்டி இளமின் பொறியாளர் பாபு, கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாத்திஆரோக்கியமேரி, வெற்றிச்செல்லன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தஜோதி, கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பால்ராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் கருணாநிதி, ஊராட்சி செயலர் சரவணப்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் கீழையூர் அருகே அச்சுகட்டளையில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட மின்மாற்றியை எம்.எல்.ஏ. இயக்கிவைத்தார்.


Next Story