கஞ்சா வைத்திருந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது


கஞ்சா வைத்திருந்த 2 வடமாநில  வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 7 July 2023 10:17 PM IST (Updated: 9 July 2023 3:34 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி ரெயில் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த 2 வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடைபாதையில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அணில் பஸ்ஸ்டாரி (வயது 28), அக்ஷயக்குமார் நவாக் (33) என்பதும், இவர்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story