2 முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பு


2 முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பு
x

வேலூரில் 2 முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நோய் அறிகுறி காணப்படும் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் நேற்றைய பரிசோதனையின் முடிவில் வேலூர் நேதாஜிநகரை சேர்ந்த 77 வயது முதியவர், காட்பாடி திருநகரை சேர்ந்த 82 வயது முதியவர் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. 2 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாவும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story