இரணியல் அருகே ெரயில் மோதி 2 மயில்கள் சாவு


இரணியல் அருகே ெரயில் மோதி 2 மயில்கள் சாவு
x

இரணியல் அருகே ெரயில் மோதி 2 மயில்கள் இறந்தன.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,:

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இரணியல் தண்டவாளம் வழியாக கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சரக்கு ெரயிலில் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு பொருட்கள் கொண்டு வரும் போது சரக்கு ரெயிலில் இருந்து சிதறும் அரிசி, கோதுமையை தின்பதற்கு மயில்கள் தண்டவாளத்துக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இரணியல் ெரயில் நிலையம் அருகே உள்ள இரணியல் கோணம் தண்டவாளம் பகுதியில் சிதறி கிடந்த கோதுமையை தின்பதற்கு ஆண், பெண் என 2 மயில்கள் தண்டவாளத்துக்கு வந்தன. அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த புனலூர் எக்ஸ்பிரஸ் எதிர்பாராத விதமாக மயில்கள் மீது ஏறி இறங்கியது. இதனால் இரண்டு மயில்களும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தன.

இதற்கிடையே அந்த பகுதியில் காகங்கள் தண்டவாளத்தை சுற்றி சுற்றி வருவதை கண்ட அப்பகுதி மக்கள் சென்று பார்த்தனர். அப்போதுதான் ஆண், பெண் என 2 மயில்கள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக இது குறித்து நாகர்கோவில் ெரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் வந்து மயில்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வேலிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அவற்றை அடக்கம் செய்தனர்.


Next Story