2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்


2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்
x
சேலம்

ஆத்தூர்:-

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் பார்த்திபன் (வயது 21). இவர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி வடசென்னிமலை கோவிலுக்கு வந்தார். அப்போது ஆத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, ஈஸ்வரன் ஆகியோர் பார்த்திபனை வழிமறித்து ரூ.15 ஆயிரம், கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்து, ஈஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1 ல் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழப்பறி வழக்கில் மாரிமுத்து, ஈஸ்வரன் ஆகிய 2 பேருக்கும் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு முனுசாமி தீர்ப்பு கூறினார்.


Next Story