மின்வாரிய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
மின்வாரிய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
நெல்லை அருகே தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 45). இவர் சமாதானபுரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேன் ஆக உள்ளார். சம்பவத்தன்று இவர் ராஜாகுடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட மின் பழுதை சரிசெய்துகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (35), பாளையங்கோட்டையை சேர்ந்த முப்பிடாதி (32) உள்ளிட்ட சிலர், முத்துப்பாண்டியிடம் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜ், முப்பிடாதி ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story