கறிக்கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது
மயிலாடுதுறையில் கறிக்கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்தனர்
மயிலாடுதுறை சித்தர்க்காடு ரெயிலடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது யாசின். இவருடைய மகன் பாசித்அலி ரகுமான் (வயது 30). இவர் மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மயிலாடுதுறை சேந்தங்குடி தென்பாதி தெருவை சேர்ந்த சந்தானம் மகன் காமராஜ் (35). இவரது நண்பர் குத்தாலம் தாலுகா அசிக்காடு முருகன்தோட்டம் கிராமத்தை சேர்ந்த பன்னீர் மகன் பிரவீன் (31). இவர்கள் இருவரும் சேர்ந்து பாசித்அலி ரகுமான் கடையில் ஆட்டுக்கறி கடனுக்கு கேட்டுள்ளனர். அப்போது கடையில் இருந்த முகமது யாசின் அவர்களுக்கு ஆட்டுக்கறி கொடுத்துள்ளார். அதற்கு பாசித்அலி ரகுமான் ஏன் கடனுக்கு ஆட்டுக்கறி கொடுக்குறீர்கள் என்று அவரது தந்தையை திட்டி உள்ளார். இதனால் அத்திரமடைந்த காமராஜ், பிரவீன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பாசித்அலி ரகுமானை அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாசித்அலி ரகுமான் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜ், பிரவீன் ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.