தாளமுத்துநகரில்ஆட்டோ கண்ணாடியை சேதப்படுத்திய 2 பேர் கைது


தாளமுத்துநகரில்ஆட்டோ கண்ணாடியை சேதப்படுத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாளமுத்துநகரில்ஆட்டோ கண்ணாடியை சேதப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தாளமுத்துநகர் துப்பாஸ்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் பிரம்மநாயகம் (வயது 49). இவருக்கும், தூத்துக்குடி கோமஸ்புரத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் முருகன் (52) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று பிரம்மநாயகம் அவரது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த முருகன் மற்றும் அவரது மகன் முனீஸ்வரன் (22) ஆகிய 2 பேரும் சேர்ந்து பிரம்மநாயகத்திடம் தகராறு செய்து கம்பால் தாக்கி உள்ளனர். அங்கு நின்ற அவரது ஆட்டோவின் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பிரம்மநாயகம் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன், முனீசுவரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story