மணல் அள்ளிய 2 பேர் கைது


மணல் அள்ளிய 2 பேர் கைது
x

மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சின்ன கோவிலாங்குளம் போலீசார் மாயம்பாறை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கரன்கோவில் அருகே உள்ள கே.வி.ஆலங்குளத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் மகன் ராஜசேகர் (வயது 29), இலவங்குளம் கிராமத்தைச் சேர்ந்த எபநேசர் மகன் மதன்குமார் (21) ஆகியோர் அங்குள்ள ஓடையில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் சரள் மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர், மதன்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மணல் அள்ளுவதற்கு தூண்டுதலாக இருந்த தருமத்தூரணியை சேர்ந்த கருப்பசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.



Next Story