லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 2 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் வைத்திருந்த 2 பேர் கைது
x

கடையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

கடையம்:

பொடல்புதூர் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் முகம்மதுஷபி (வயது 60). அதே பகுதியைச் சேர்ந்தவர் முகம்மதுஅலி (48). இவர்கள் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வாங்கி வந்தபோது, அவர்களை கடையத்தில் வைத்து கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 300 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story