நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாடிய 2 பேர் கைது


நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாடிய 2 பேர் கைது
x

கணியம்பாடி அருகே நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் நெல்வாய் அடுத்த ஈடிகைதோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் நாட்டு துப்பாக்கி வைத்து, பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் மலைக்கோடி பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 24), நவீன் (22) என்பதும், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்து அவர்கள் பறவைகளை வேட்டையாடியதும் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story