பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது


பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது
x

பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது

நாகப்பட்டினம்

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சீசன் காலம் என்பதால் பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் வந்து தங்கி செல்லும். இவ்வாறு வரும் பறவைகளை வேட்டையாடுவதை தடுக்க திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரினக்காப்பாளர் (கூடுதல்) அகில் தம்பி ஆகியோரின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர் நேற்று ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது மூலக்கரை கிராம பகுதியில் பறவைகளை வேட்டையாடிய அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது60), ஆதிரங்கத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (28) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த மடையான்பறவைகள், வளைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Related Tags :
Next Story