புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் பகுதியில் புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் பகுதியில் கடைகளில் புகையிலை ெபாருட்கள் விற்கப்படுவதாக தனிப்படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வடக்கு ராமசாமி கோவில் அருகே உள்ள கடையில் சோதனை செய்தனர். அதில் அங்கு பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புதுப்பட்டி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வக்கொடி, முக்கூடல் சேனையர் தெருவைச் சேர்ந்த முத்துராஜ் ஆகியோரை பிடித்து முக்கூடல் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 35 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.17,500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story