லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருவானைக்காவல் பசுமடம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சந்திரமவுலி (45) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் விற்ற தொகை ரூ.17 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோல் பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக அந்தோணி (49) என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு விற்ற தொகை ரூ.150-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story