மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x

பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, போலீசாரை கண்டதும் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்த முகமது அசன் மகன் முகமது சம்சீர் (வயது 20), மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் ஓட்டி வந்தது திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது நாகர்கோவில் மற்றும் கோவையில் திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.


Next Story