கிருஷ்ணகிரியில் ஸ்கூட்டர் திருடிய 2 பேர் கைது


கிருஷ்ணகிரியில் ஸ்கூட்டர் திருடிய 2 பேர் கைது
x

கிருஷ்ணகிரியில் ஸ்கூட்டர் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஆசாத் நகரை சேர்ந்தவர் ரியாஸ் (வயது 42), கூலித்தொழிலாளி. இவர் தனது ஸ்கூட்டரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் அதை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து ரியாஸ் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார்.

இதற்கிடையே பர்கூர் போலீசார் டவுன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி அதில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மவவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த சஞ்சய் (19) மற்றும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. மேலும் அவர்கள் ஓட்டி வந்தது ரியாசிடம் இருந்து திருடப்பட்ட ஸ்கூட்டர் என தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story