டிராக்டரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது


டிராக்டரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது
x

டிராக்டரில் பேட்டரி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் கோட்டைவிளைபட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் சுரேஷ் (வயது 30). இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். மேலும் டிராக்டரை வாடகைக்கு கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரது டிராக்டரில் உள்ள ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடி சென்று விட்டனர். இதுபற்றி சுரேஷ் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், அகஸ்தியர் புரத்தைச் சார்ந்த மிக்கேல் மகன் சிலுவைராஜ் (35) மற்றும் இசக்கிமுத்து மகன் சுதாகர் (28) ஆகிய இருவரும் பேட்டரியை திருடியது தெரியவந்தது. விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள் இருவரையும் கைது செய்து பேட்டரியையும் பறிமுதல் செய்தார்.


Next Story