காப்பர் கம்பிகள் திருடிய 2 பேர் கைது


காப்பர் கம்பிகள் திருடிய 2 பேர் கைது
x

தூசி அருகே மின்இணைப்பை துண்டித்து காப்பர் கம்பிகள் திருடிய காஞ்சீபுரத்தை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் மின்விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வெம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மின்வாரிய உதவி பொறியாளர் அஜித்பிரசாத் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர் அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே உள்ளே டிரான்ஸ்பார்மரில் இருந்த காப்பர் கம்பிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் மின்இணைப்பை துண்டித்து காப்பர் கம்பிகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா மானாமதி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 19), பிரபாகரன் (21) ஆகிேயார் மின்இணைப்பை துண்டித்து காப்பர் கம்பிகள் திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story