மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது


தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மின் மோட்டார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் எஸ்.வி.புரம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ஆதிராம் (வயது 44). இவருக்கு சொந்தமான கலைஞானபுரம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் இருந்த மின் மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குளத்தூர் கலைஞானபுரம் சன்னாசி மகன் முனியசாமி என்ற உசிலி (35) மற்றும் கலைஞானபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் முனியசாமி என்ற செல்வம் (45) ஆகிய 2 பேரும் திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து குளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி அந்த 2 பேரையும் கைது செய்து மின்மோட்டாரை பறிமுதல் செய்தார்.


Next Story