மின் வயர்களை திருடிய 2 பேர் கைது
அணைப்பட்டி உறைகிணற்றில் இருந்து மின் வயர்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்
நிலக்கோட்டை அருகே உள்ள செக்காபட்டியை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 30). இவர், நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் மோட்டார் இயக்கும் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அணைப்பட்டி வைகை ஆற்றில் உள்ள உறைகிணற்றில் மின்மோட்டாரை இயக்கினார். ஆனால் மின்மோட்டார் இயங்கவில்லை.
இதனையடுத்து உறைகிணறு அருகே சென்று அசோக்குமார் பார்த்தார். அப்போது அங்கு நிலக்கோட்டை இ.பி. காலனியை சேர்ந்த சுரேஷ்குமார் (48), பெருமாள் (26) ஆகியோர் உறைகிணற்றில் இருந்து மின்வயர்களை திருடி கொண்டிருந்தனர். இதனைக்கண்ட அசோக்குமார், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் பிடித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story