துணிக்கடையில் திருடிய 2 பேர் கைது


துணிக்கடையில் திருடிய 2 பேர் கைது
x

துணிக்கடையில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி சுப்ரமணியபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (வயது 53). இவர் திருச்சி சூப்பர் பஜார் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை மூடி பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து கடையின் உள்ளே கல்லாவில் வைத்திருந்த ரூ.21 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் முகமது அலி ஜின்னா புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து, மார்சிங் பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த கிருஷ்டன் (19), ஜெயராஜ் ஜெனிஸ் (19) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தார்.


Next Story