ஆட்டோவில் ஆடு திருடிய 2 பேர் கைது
ராமநாதபுரம் அருகே ஆட்டோவில் சென்று ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டன
ராமநாதபுரம் அருகே ஆட்டோவில் சென்று ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆடு திருட்டு
ராமநாதபுரம் அருகே வாணி கிராமம் பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி மலைராணி (வயது 53). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதிக்கு ஆட்டோவில் வந்த 2 பேர் திடீரென்று மலைராணி மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டினை திருடி கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மலைராணி திருடன், திருடன் என கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் ஆட்டோவில் இருந்த மதுரை கள்ளிகுடி தாலுகா இலுப்பகுளம் பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் சுரேஷ் (22) என்பவர் பிடிபட்டார்.
2 பேர் கைது
அவரிடம் இருந்த திருடப்பட்ட ஆடு மற்றும் ஆட்டோவை கைப்பற்றி கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சுரேசை கைது செய்து ஆட்டோ மற்றும் ஆட்டை பறிமுதல் செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் தப்பி ஓடிய ராமநாதபுரம் குறத்திஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த அழகர் மகன் பசுபதி (27) என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.