விருத்தாசலம் அருகே ஆடுகள் திருடிய 2 பேர் கைது


விருத்தாசலம் அருகே ஆடுகள் திருடிய 2 பேர் கைது
x

விருத்தாசலம் அருகே ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

கம்மாபுரம்

விருத்தாசலம் அடுத்த புதுவிருத்தகிரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான 2 ஆடுகளை வீட்டின் முன்பு கட்டியிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த 2 பேர் அந்த 2 ஆடுகளையும் திருடிவிட்டு தப்பி செல்ல முயன்றனர். இதுகுறித்து அறிந்த ராதாகிருஷ்ணன் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அந்த 2 பேரையும் மடக்கிப்பிடித்து ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் விஜயகாந்த் (33), குமாரசாமி மகன் சிவக்குமார் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து விஜயகாந்த் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story